களனி கேபிள்ஸ் பிஎல்சி முன்னெடுக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையான “களனி விசுர” அனுராதபுரம், ரஜரட்ட ஹோட்டலில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக “களனி விசுர” ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

நாடு முழுவதும் பரந்து காணப்படும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு துறையில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் முதல் தர இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிளான களனி கேபிள், இலங்கைத்தயாரிப்பாக அமைந்துள்ளதுடன், களனி கேபிள்ஸ் பிஎல்சியால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அனுராதபுரத்தில் நடைபெற்ற “களனி விசுர” பயிற்சிப்பட்டறையை, களனி கேபிள்ஸ் பிஎல்சியின் விற்பனை பொறியியலாளர் சஞ்ஜீவ குணதிலக முன்னெடுத்திருந்தார். 

இந்த நிகழ்வில் 150க்கும் அதிகமான இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றுக்கான தரம் உத்தரவாதமளிக்கப்பட்ட வயர்களை தெரிவு செய்வது, தூரத்தை கவனத்தில் கொண்டு இல்லங்கள் மற்றும் கட்டடங்களில் ப்ளக் பொயின்ட்களையும் சுவிட்ச்களையும் பொருத்துதல், விளக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து வயர்களை தெரிவு செய்தல், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பில் கவனம் செலுத்தல் மற்றும் வயர்களை பதிதல் பற்றிய விடயங்கள் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கு உணவு வேளைகள் மற்றும் பான வகைகள் போன்றன வழங்கப்பட்டிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கலுடன் நிறைவடைந்திருந்தன.

“களனி விசுர” திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் வீடுகள் அல்லது கட்டடங்களுக்கு அவசியமான வயர்களை பதிதல் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், இதன் மூலமாக போட்டிகரத்தன்மை வாய்ந்த சூழலில் பங்குபற்றிய இலத்திரனியலாளர்களுக்கு மின்கட்டமைப்புகளை பொருத்தும் ஆளுமை சேர்க்கப்படும்.

நாடு முழுவதையும் சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் முன்னணி பயிற்சிப்பட்டறையாக “களனி விசுர” அமைந்துள்ளது. 

இந்த திட்டத்தின் மூலமாக மொத்தமாக 20,000 இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் இதுவரை அனுகூலம் பெற்றுள்ளனர்.

களனி கேபிள்ஸ் பிஎல்சி கொழும்பு நகரங்களிலும் ஏனைய நகரங்களிலும் இந்த களனி விசுர பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்திருந்ததுடன் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது. குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகியன மாவட்டங்களிலும் இவை முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்த பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவானோர் “களனி விசுர” திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருந்தனர். 

நிபுணத்துவ வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்துவதுடன், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களின் சமூக நிலைகளை மேம்படுத்தும் வகையிலும் “களனி விசுர” சமூக பொறுப்புணர்வு செயற்திட்டம் அமைந்துள்ளது.

களனி கேபிள்ஸ் பிஎல்சி வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

“வயர் என்றால் களனி எனும் வர்த்தக நாம தொடருக்கமைய, களனி கேபிள்ஸ் சந்தையில் உயர் தரம் வாய்ந்த பல தயாரிப்புகளின் மூலம் ஆதிக்கம் செலுத்துகிறது. பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் விற்பனையில் களனி கேபிள்ஸ் முன்னணி ஸ்தானத்தை பேணி வருகிறது” என்றார்.

“களனி விசுர” பயிற்சிப்பட்டறையை நாம் மீண்டும் அனுராதபுரத்தில் முன்னெடுக்க தீர்மானித்ததற்கு, இப்பிரதேசத்தில் பெருமளவான இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் நாடு முழவதிலும் இலத்திரனியல் வயர்களை பதியும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். 

வெளிநாட்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களில் பணியாற்றுவதற்கும் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இந்த பயிற்சிப்பட்டறைகள் மூலமாக உலகத்தரம் வாய்ந்த அறிவை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த பயிற்சிப்பட்டறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 47 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 

2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில் இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 

களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. 

களனி கேபிள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச்சிறப்புகள் விருதையும் தனதாக்கியிருந்தது.