பூர்வீக நூதனசாலை மீண்டும் திறப்பு

Published By: Robert

15 Dec, 2015 | 02:05 PM
image

காத்தான்குடியில் கடந்த 5-04-2015 மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டிருந்த பூர்வீக நூதனசாலை மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்று மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பூர்;வீக நூதனசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலையில் சில உருவபொம்மைகள் (உருவச்சிலைகள்) வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஆலோசனை விடுத்திருந்தது.

இதனடிப்படையில் கடந்த ஜுன் மாதம் தொடக்கம் இந்த நூதனசாலை மூடப்பட்டது. 

அங்கு வைக்கப்பட்டிருந்த உருவபொம்மைகள் (உருவச்சிலைகள்) தற்போது அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர், மீண்டும் இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நூதனசாலை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அதன் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16