மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

09 May, 2021 | 07:57 PM
image

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோ்ந்த ஆண் ஒருவர் வாழைச்சேனை பிரதேச காட்டுப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார். பின்னர் குறித்த நபர் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (09) வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப் பகுதியில் சடலம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றவர்களால் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கடந்த 27 ஆம் திகதி காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள நிலையில், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31