திரிபடைந்துள்ள கொரோனா வைரஸ் உள்நுழைவதைக் கட்டுப்படுத்த சிறந்த சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

Published By: J.G.Stephan

09 May, 2021 | 09:25 AM
image

(நா.தனுஜா)
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை  உள்ளடக்கியதாக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன் அதில் கையெழுத்திடுமாறு பொதுமக்களைக் கோரியுள்ளது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது. தீவிரமாகத் தொற்றும் வீரியம் கொண்ட பி.1.1.7 வைரஸ் வகை நாடு முழுவதும் பரவி வருகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், அது சுகாதார முறைமையில் அதீத சுமையினை ஏற்படுத்தி சுகாதாரப்பணியாளர்களுக்கு அதிகரித்த அபாய நேர்வினையும் இறப்புக்களில் அதிகரிப்பினையும் ஏற்படுத்தும்.

இம்மாதம் 2 ஆம் திகதி 1891 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டாதகக் கூறப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கினை விட அதிகரித்தது. இவ்விடயத்தில் உடனடியாக தன்முனைப்பான நடவடிக்கைகள் இல்லாமையானது இலங்கைப் பிரஜைகளின் சுகாதாரம் மற்றும் நலனோம்புகையினை ஆபத்திற்குள்ளாக்கும் அதேவேளை, எமது பொருளாதாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் சேதத்தினை ஏற்படுத்துகின்றது. தீர்மானகரமாகச் செயற்படத் தவறினால் அதற்கு இலங்கையர்கள் உயிர்களையே விலையாகக் கொடுக்கவேண்டியிருக்கும்.

எனவே இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் மிகச் சிறந்த எல்லைக் கட்டுப்பாட்டினை அமுல்படுத்துமாறும் நாட்டிற்குள்ளும் நுழைவிடங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் நாட்டினுள் முழுவேகத்தில் பரவிவரும் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த செயற்திறனான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54