மாரவில - தம்போவ பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் வைத்திருந்த 4 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து துப்பாக்கி, 10 ரவைகள் இரண்டு மெகசீன்கள், 130 கிராம் வெடி மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த பொருட்கள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த கால்வாய் ஒன்றுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.