கர்ப்பிணிப்பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் - வைத்தியநிபுணர் பத்மா குணரத்ன

Published By: Digital Desk 3

08 May, 2021 | 09:00 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில் கர்ப்பிணிப்பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

முதல் மூன்றுமாதகாலத்தில் குழந்தையின் அவயவங்களின் வளர்ச்சி இடம்பெறுவதால், அக்காலப்பகுதியில் எந்தவொரு வைரஸ் தொற்றுக்குள்ளாவதும் விரும்பத்தக்கதல்ல.

தொற்று ஏற்படும் பட்சத்தில் உரிய காலத்திற்கு முன்னரே குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியநிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதென்பது மிகவும் முக்கியமானதாகும். அந்தவகையில் தற்போதுவரை 6 வகையான தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் ஏதேனுமொரு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு, அனைவரும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசிகளும், அதனைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு 65 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவிற்கு அவர்களின் நிலை மோசமடைவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகும்.

எனவே தற்போதைய நெருக்கமிக்க சூழ்நிலையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதே மிகவும் முக்கியமானது என்பதுடன், கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.

எமது நாட்டில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதியளிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுவதால், பொதுமக்கள் யாவரும் தடுப்பூசியைப் பெறுவதற்குத் தயக்கம்கொள்ளத்தேவையில்லை.

அதேவேளை பொதுப்போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதால் உரியவாறு முகக்கவசங்களை அணிவதுடன், அவ்வப்போது சனிட்டைசரை பயன்படுத்த வேண்டும்.

அதுமாத்திரமன்றி சுகாதாரப்பிரிவினரால் கூறப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டும். அத்தியாவசியத்தேவைகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வீடுகளிலேயே இருக்கவேண்டும்.

மேலும் கர்ப்பிணிப்பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். முதல் மூன்றுமாதகாலத்தில் குழந்தையின் உறுப்புக்களின் வளர்ச்சி இடம்பெறுவதால், அக்காலப்பகுதியில் எந்தவொரு வைரஸ் தொற்றுக்குள்ளாவதும் விரும்பத்தக்கதல்ல.

அதேபோன்று இறுதி மூன்றுமாதகாலப்பகுதியில் இருக்கும் கர்ப்பிணிப்பெண்கள் மென்மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொற்று ஏற்படும் பட்சத்தில் உரிய காலத்திற்கு முன்னரே குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47