மூன்று நாட்களில் “சைனோபார்ம்“ தடுப்பூசிக்கு அனுமதி - ஜனாதிபதி 

Published By: Digital Desk 4

07 May, 2021 | 09:15 PM
image

உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம், (Tedros Adhanom)  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.

கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உலக சுகாதார தாபனத்தின் பாராட்டுக்களைத் தெரதிவித்த டெட்ரோஸ், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் கூறினார்.

முதல் கொவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார். 

இதன் போது உலக சுகாதார தாபனத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் இலங்கையின் வெற்றி குறித்து கலந்துரையாடப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இம்முறையும் கொவிட் வைரஸ் பரவுவதை விரைவில் கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை தெரிவித்தது.

இரண்டாவது கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 20 மில்லியன் “அஸ்ட்ராசெனகா“ தடுப்பூசிகளுக்கான தேவை உலகளவில் உள்ளது.

நாட்டில் அதன் தேவை 600,000 தடுப்பூசிகளாகும். அந்த தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் உதவுமென தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

“சைனோபார்ம்“ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று டெட்ரோஸ்  குறிப்பிட்டார்.

அந்த அனுமதியுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சைனோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார ஸ்தாபனம் பிராந்திய மட்டத்திலும் அதன் கொழும்பு அலுவலகத்தின் ஊடாகவும் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21