அவுஸ்திரேலியாவின் ஒப்பந்த இரத்து அறிவிப்பு : பட்டி மற்றும் பதை திட்டத்திற்கு இறங்கு முகம்

Published By: Digital Desk 2

07 May, 2021 | 09:05 PM
image

ஏ.என்.ஐ.

சீனாவுடனான சர்ச்சைக்குரிய பட்டி மற்றும் பாதை முன்முயற்சி (பிஆர்ஐ) ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது.

இந்த ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளதன் ஊடாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கு 'இறங்கு முகம்' ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையானது இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதற்கு மற்றைய நாடுகளுக்கும் தூண்டக்கூடும்.

கடந்த 8ஆம் திகதி ஒக்டோபர் 2018ஆம் ஆண்டு, விக்டோரியா மாநில அரசாங்கத்திற்கும் சீனாவின் தேசிய மேம்பாட்டு மற்றும் சீர்திருத்த ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அரசாங்கம் இரத்து செய்தது. அத்துடன் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி  அன்று இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட 'ஒரு கட்டமைப்பு' ஒப்பந்தத்தையும் அவுஸ்திரேலியா இரத்து செய்தது.

 

பொதுநலவாய நாடுகளின் புதிய வெளிநாட்டு வீட்டோ சட்டத்தின் கீழ் பட்டி மற்றும் பாதை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன் தெரிவித்தார். இந்த இரத்து என்பது தொழில்கள் உருவாக்கம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் சீன - அவுஸ்திரேலிய ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். 

இந்த இரத்து அறிவிப்பானது சீனாவுக்கு 'மிகவும் மோசமான இறங்குமுகம்' என்றும், பெய்ஜிங்குடனான கான்பராவின் உறவுகள் மோசமடைந்து வருவதாகவும் ஜேர்மனின் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கல்லூரியின் ஹெரிபர்ட் டைட்டர் கூறினார்.

'அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவு பட்டி மற்று பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற நாடுகளின் தாமதங்கள் அல்லது வெளியேற்றங்களை தூண்டக்கூடும்' என்று டைட்டர் தெரிவித்தார். 'கொரோனா தொற்றுநோயால் இந்த திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாட்டு வேகத்தை இழந்துள்ளது, இதனால் சீனாவினுடைய ஏனைய பங்காளிகள் பலரை பொருளாதார அழிவினை எதிர்கொள்ளச் செய்துள்ளது' என்றும் குறிப்பிட்டார்.

'கொரோனா பரவலானது,  சீனாவுக்கு மிகுந்த சவால்களை ஏற்படுத்தியுள்ளது.  பல நாடுகள் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனால் சீனா அந்த நாடுகளுக்கான கடன்களின் நிபந்தனைகளை நீட்டிக்க வேண்டும் அல்லது பொதுவாக திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்' என்று டைட்டர் கூறினார்.

அமெரிக்காவின் கீல் இன்ஸ்டி டியூட் போர் தி வேல்ட் எக்கொனாமி மற்றும் அமெரிக்காவின் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளின் படி, 'சீன ஒப்பந்தங்களில் அசாதாரணமான இரகசியத்தன்மை கொண்ட உட்பிரிவுகள் உள்ளன, அவை கடன் வாங்குபவர்களுக்கு விதிமுறைகளை வெளிப்படுத்தவோ அல்லது கடனின் இருப்பைக் கூட தடை செய்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளன.

 

'சீன ஒப்பந்தங்களில் இரத்து, முடக்கம் மற்றும் உறுதிப்படுத்தல் உட்பிரிவுகள் கடனளிப்பவர்களின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை பாதிக்கும் வகையில் கடன் வழங்குநர்களை அனுமதிக்கக்கூடும்' என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

'பட்டி மற்றும் பாதை திட்டத்தின் ஒப்பந்தங்கள் 'ஒளிபுகா ஒப்பந்தங்கள்' என்ற தரத்தினைக் கொண்டவையாக மாறியுள்ளன என்றும் 'ஊழல்' பல ஒப்பந்தங்களை செய்வதற்கு உதவியது' என்றும் டைட்டர் மேலும் கூறினார்.

'மக்கள்தொகை அடிப்படையில் ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும் அவுஸ்திரேலியா மட்டுமல்ல, பெரிய வீரம்மிக்க நாடுகளும், பட்டி மற்றும் பாதை  முன்முயற்சியிலிருந்து விடைபெறுகிறார்கள், இதனால் உலக நாடுகளிடமிருந்து மிக நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்பைக் கண்டுபிடிப்பது சீனாவின் கனவுத்திட்டத்திற்கு பெரும் அடியாக இருக்கும்' என்றும் டைட்டர் கூறினார்.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் அபிலாஷைகளைப் பற்றிய மனமாற்றத்தின் அறிகுறிகளையும் காட்டியுள்ளது. 

பேர்லினில் உள்ள மெரிக்ஸ் சீனா சிந்தனைக் குழுவின் இயக்குனர் டி.டபிள்யூ. மிக்கோ ஹூட்டாரி, ஜேர்மனிய அரசாங்கம், மேர்க்கெல் அதிபராக இருந்த இறுதிக்காலத்தின் சில மாதங்களில் அதன் சீனக் கொள்கையில் 'ஒருமனதுடன் திருமணம் செய்து கொள்ளும்' வகையிலான ஆபத்துக்களை கொண்டிருந்தது என்றும் இது பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மாற்றத்திற்கு அங்கீகரம் அளிப்பது போன்ற நிலைமையை உருவாக்கி விட்டது என்றும் கூறுகின்றார்.

 

இதற்கிடையில், பட்டி மற்றும் பாதை முன்முயற்சித் திட்டத்துக்கும் விக்டோரியா மாநிலத்துக்கும் இடையிலான ஒப்பந்தங்களை இரத்து செய்ய அவுஸ்திரேலியா கடந்த வாரம் எடுத்த முடிவுக்கு சீனா கடுமையாக பதிலளித்தது, அச்செயற்பாடானது 'சீனாவின் பல எதிர்மறை நகர்வுகளில்' ஒன்றாகும், குறிப்பாக சீனா அவுஸ்திரேலியாவின் முடிவு இருதரப்பு உறவுகளை பாதித்ததாகக் கூறியுள்ளது.

  

தென் சீனாவின் மோர்னிங் போஸ்ட்டின் கூற்றுப்படி, சீனாவின் உயர்மட்ட தூதர் செங் ஜிங்கே, அவுஸ்திரேலியாவை குற்றம் சாட்டினார், அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இது பொருளாதார வற்புறுத்தல் மற்றும் 'ஆத்திரமூட்டல்கள்' என்றும் கூறினார்.

  

கொரோனா தொற்று நோயின் தோற்றம் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்வைத்து கான்பர்ரா பெய்ஜிங்கை கோபப்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் சீன-அவுஸ்திரேலிய உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

பல்வேறு அவுஸ்திரேலிய தயாரிப்புகள் மீதான தடைகளை சீனா குறைத்துள்ளதால், பல மாதங்களாக பெய்ஜிங்குடன் நடந்து வரும் வர்த்தகப் போரில் கான்பெர்ரா பூட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04