வடக்கு விவசாய அமைச்சின் “சூழலியல் விவசாயத்தை நோக்கி” கண்காட்சி இன்று ஆரம்பம்

Published By: Priyatharshan

22 Aug, 2016 | 10:19 AM
image

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி…’ என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சி நாளை திங்கட்கிழமை இன்று ஆரம்பமாக உள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சி ஆலய வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. 

இக்கண்காட்சி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வடக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாயம் அதிக அளவிற்கு செயற்கை உரங்களையும் செயற்கைப் பீடைகொல்லிகளையும் பயன்படுத்தும் செறிவு வேளாண்மை ஆகும். 

இந்த இரசாயனங்கள் உணவின் மூலம் உடலை அடைந்து கேடுகளை விளைவிப்பதோடு, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி வருகிறது. 

இவற்றைத் தடுப்பதற்கு நஞ்சுகளைப் பயன்படுத்தாத உணவு உற்பத்தி முறையை நோக்கி நாம் மீளவும் நகர வேண்டி உள்ளது. 

இது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாய இரசாயனங்களுக்கு மாற்றீடாக சேதனப் பசளைகள் மற்றும் இயற்கை முறையிலான பீடைகொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி…’ என்னும் தொனிப்பொருளில் வடக்கு விவசாய அமைச்சு ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடத்திவருகிறது.

இக்கண்காட்சியில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அத்தோடு, நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரசமென்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை மையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

இக்கண்காட்சியில் பார்வையாளர்களிடையே விவசாயம் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு சரியாக விடையளிப்போருக்குப் பயன்தரும் மரக்கன்றுகளும் தினமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இன்று ஆரம்பமாகும் இக்கண்காட்சி பூங்காவனத் திருவிழா நடைபெறும்எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 2 மணியில் இருந்து 8 மணிவரை நடைபெறவுள்ளது. 

விசேட திருவிழா நாட்களான தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவனத் திருவிழா நாட்களில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 8 மணிவரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35