சக்கர நாற்காலி  முன்னோக்கி  உருள்கின்றது : மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் 

Published By: Priyatharshan

22 Aug, 2016 | 09:42 AM
image

(ஆர்.வி.கே.)

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலிகளில் வாழும் மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து விளையாட்டுப்போட்டி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.

தமிழ் மாற்றுத் திறனாளிகளே தலைமை தாங்கி , ஒருங்கிணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றனர். போட்டிகளின் அறிவிப்பாளர்களாகவும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோரே இருக்கின்றனர்.

ஆறு பேரைக் கொண்ட ஆறு அணிகள் போட்டியில் களம் கண்டன. 40 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியின் இறுதியில் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. முதன் முறையாக 50க்கும் மேற்பட்ட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மைதானத்து வருகை தந்து போட்டியில் கலந்துகொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளை மையமாக வைத்து , அதிலும் முள்ளாந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின்  தலைமையில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் நல்லுலகின் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஊடகங்கள் , தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் இணைத்து இந்த தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப்போட்டி ஒழுங்கு செய்யப்படுகின்றது. 

அடுத்ததாக இறுதிக்கட்ட போட்டிகள் எதிர்வரும் புரட்டாதி மாதத்தில் மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் நடைபெறுவுள்ளன. 

இந்நிகழ்வில் தமிழ் மாற்றுத்திறனாளிகள்  அமைப்பின் தலைவர்  உரையாற்றுகையில், 

நாம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி அடி எடுத்து வைக்கின்றோம். போர் தாண்டவமாடிய பூமியில் அதன் வடுக்கள் நாங்கள். வலிகள் நாங்கள். சக்கர நாற்காலிகளிலும் கட்டில்களிலும் முடக்கப்பட்ட நாம் இன்று அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் இணைத்து மாபெரும் விளையாட்டுப்போட்டியை நடத்த விளைகின்றோம். இதனை மாற்றுத் திறனாளிகளே நடாத்துகின்றோம் , நாமே  ஒருங்கிணைக்கின்றோம். 

இவை எல்லாம் சாத்தியமாகக் காரணம் இங்கு எம்முன்னே நிற்கும் நீங்களும் புலம்பெயர்ந்து போனாலும் எம்மை தம் மனத்தில் வைத்து எம்மீது அன்பு பாராட்டும் எமது உறவுகளுமே ஆகும். 

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் என்றால் மற்றவர்களில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிலை ஒரு பொதுத் தலைவிதி போல இருந்தது. ஆனால் நீங்களே தலைமை ஏற்று நடத்துங்கள் எனக் கூறி எம்மை தாங்கும் அணுசரணையாளார்களின் பட்டியலை மேலே கண்டோம். கடல் கடந்து வாழும் அவர்கள் எம்மீது கொண்ட அன்பு அளப்பரியது.

எமது சக்கர நாட்காளலியை நீங்கள் முன்நோக்கி நகர்த்துகின்றீர்கள்.  நாம் இந்த நிமிடத்தில், உயிரிழை கடந்து வந்த  பாதைகளை நினைவு  கூருகின்றோம். 

எமது முயற்சிகள் தொடர அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு வடக்கு கிழக்கு எங்கிலும் பரந்து வாழும் அனைத்து மாற்றுத்  திறனாளிகள் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58