டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள்

Published By: Vishnu

07 May, 2021 | 10:19 AM
image

டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன.

டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன. 

இந் நிலையில்  "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இணையத்தளத்தில் தொடங்கப்பட்ட இணையத்தள பிரச்சாரம் இரண்டு நாட்களிலேயே 187,000 க்கும் அதிகமான கையொப்பங்களை பெற்று, இரண்டு இலட்சங்களை நெருங்குகிறது.

இந்த முடிவுகள் ஜப்பானின் தலைநகரில் பாரிய விளையாட்டு நிகழ்வை நடத்துவதில் பொதுமக்களின் கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தொற்றுநோயின் நான்காவது அலையை எதிர்த்து, மந்தமான தடுப்பூசி பிரச்சாரத்துடன் போராடி வரும் ஜப்பானிய அரசாங்கம் டோக்கியோவிலும் மற்ற மூன்று பகுதிகளிலும் அவசரகால நிலைகளை மே இறுதி வரை நீட்டிக்க முயல்கிறது என்று அந் நாட்டு பொருளாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 23 ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41