பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்!

Published By: Vishnu

07 May, 2021 | 09:33 AM
image

பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.

இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும்.

ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர்.

ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென பிரேஸில் பொலிஸ்மா அதிபர் ரொனால்டோ ஒலிவேரா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்த சோதனையில் குறிவைக்கப்பட்ட கும்பல் போதைப்பொருள் கடத்தல், மோசடி, கொலைகள் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்று அந் நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் பரந்த பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றில் பல சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரேஸிலில் பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் முக்கிய நகரங்களில் குற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எதிராக அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, தொற்றுநோய்களின் போது ரியோவின் வரிய பகுதிகளில் பொலிஸ் நடவடிக்கையை தடை செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47