ஐ.நா அமைதிகாக்கும் படையணியில் இலங்கை தொடர வேண்டும் - ஐ.தே.க

Published By: Digital Desk 3

06 May, 2021 | 06:42 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் செயற்பாடுகளில் இலங்கை தொடர்ந்தும் பங்களிப்புச்செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது எதிர்கொண்டுள்ள மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

உயர்மட்ட வெளிவிவகாரக்கொள்கையின் ஓரங்கமாக, ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் செயற்பாடுகளில் பங்களிப்பை வழங்குவதற்கு 2015 - 2019 வரையில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் தீர்மானித்தது.

அல்கைதாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக்குழுக்களை எதிர்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் பிரிவொன்று எம்.ஐ - 17 ஹெலிகொப்டருடன் மாலிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

எனவே எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகளில் இலங்கை பங்களிப்பு வழங்கமுடியும் என்பதுடன், அவை வலுவிழக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலை மற்றும் மூலதனத்தேவை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின் ஏற்றுமதிக்கடன் மார்க்கத்தின் ஊடாகவே ஹெலிகொப்டரை கொள்வனவு செய்யவேண்டும்.

அதேபோன்று இத்தகைய கட்டமைப்புக்களில் எமது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கவேண்டுமெனின், தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொண்டுள்ள மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04