இலங்கை மற்றும் சேர்பியா  ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டது.


இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையில் அங்கீகாரத்தை பெறுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை மேற்படி அங்கீகாரம் வழங்கியுள்ளது.