திருகோணமலையில் 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Gayathri

06 May, 2021 | 05:09 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் 85 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்று (05)இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந் தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தின்  கொரானா நிலைமை பற்றி நேற்று (05) அவர் மேலும் தெரிவிக்கையில் , உப்புவெளி சுகாதார பிரிவில் 29 பேரும், திருகோணமலை பிரிவில் 2 3பேரும் , கந்தளாய் 8 பேரும், மூதூர் 11பேருமாக புதிய தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளார்கள் என்றார் . 

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 14 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எனவும்,  திருகோணமலை பகுதியில்தான் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன .

திருகோணமலை சுகாதார பிரிவில் 5 மரணங்களும், உப்புவெளி பிரிவில் 4 மரணங்களும், மூதூரில் 2 மரணங்களும், கந்தளாயில் 2 மரணங்களும், கிண்ணியாவில் 01 மரணமும் என இவ்வாறு கொரோனா மூலமாக ஏற்பட்ட இழப்பாக காணப்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 700 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில் மே மாதமளவில் தற்போது வரை 205 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர். 

தற்போது கொவிட்-19 சிகிச்சை நிலையங்களுக்காக இடப் பற்றாக்குறை நிலவி வருகிறது. எதிர்வரும் காலங்களில் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கோமரங்கடவெல வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளதுடன், மூதூர் வைத்தியசாலையில் உள்ள 12 படுக்கை கட்டில்கள் தயார் நிலையில் இருந்து வருவதுடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்குமானால் சிகிச்சை நிலையங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50