ரிஷாத் பாராளுமன்றத்துக்கு வருவதால் விசாரணைகளுக்கு பாதிப்பு - அமைச்சர் சரத் வீரசேகர

Published By: Digital Desk 2

06 May, 2021 | 05:08 PM
image

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவந்தால் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனை தெரிந்துகொண்டே எதிர்க்கட்சி எமக்கு தேவையற்ற அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொவிட்19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான இந்தியாவின் புலனாய்வு தகவல்களை அன்றைய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அதேபோன்று மாவனெல்லை புத்தர்சிலைக்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யதபோது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்ற 10 விடயங்கள் தொடர்பில் அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால்தான் குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள முடியுமாகியது. தற்போது நாங்கள் தாக்குதல் தாெடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குண்டு தாக்குதலின் பிரதான சந்தேக நபராகும். அதனால்தான் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவந்தால், மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் வெளிப்படுத்துவார்.பல நபர்களுடனும் தொலைபேசியில் கதைப்பார்.இவ்வாறான நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படும். இதனை நன்கு தெரிந்துகொண்டே எதிர்க்கட்சியினர் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முயற்சிக்கின்றனர்.

அத்துடன் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவது, அவருக்கு எதிராக உறுதியான சாட்சியங்கள் இருப்பதனாலாகும். அதனால் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது. ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் நீதியை பெற்றுக்கொடுப்பாேம். தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் தற்போது அதுதொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59