மெக்ஸிகோ மெட்ரோ ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Published By: Vishnu

05 May, 2021 | 09:15 AM
image

மெக்ஸிகோ சிட்டி மெட்ரோ ரயில் பாலம் திங்களன்று இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை குழைந்தைகள் உட்பட குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 79 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரயில் வண்டிக்குள் சிக்கியுள்ள நான்கு சடலங்களை மீட்புப் படையினர் மீட்டனர். அந்த நால்வரும் இறந்தவர்கள் 23 பேரில் சேர்க்கப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

செவ்வாயன்று பாலத்தில் தொங்கியுள்ள ரயில் வண்டியை மீட்பதற்கு ஒரு கிரேன் கொண்டு வரப்பட்டது.

உலகின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மெக்ஸிகோவின் தலைநகர மெட்ரோ ரயில் சேவை அமைப்பில் பல தசாப்த காலப் பகுதியில் பதிவான மிக மோசமான சம்பவம் இதுவாகும்.

இந்த சம்பவம் செவ்வாயன்று அந் நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் (03:00 GMT) மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் மெக்ஸிகோ மக்களிடையே கோபத்தை அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் விசாரணைகள் மறைக்கப்படாமல் வெளிப்படைத் தன்மையாக இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52