யாழ். மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

04 May, 2021 | 08:57 PM
image

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் (புதிய பாடத் திட்டம்) தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவரது இசட் புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும் யாழ்ப்பாணம் மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் கலைப்பிரிவில் தெஹிவளை, ப்ரஸ்படேரியன் மகளிர் கல்லூரி மாணவி சாமல்கா செவ்மினி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தகப்பிரிவில் காலி சங்கமித்த வித்தியாலயத்தைச் சேர்ந்த அமந்தி இமாஷா மதநாயக்க அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் ஒரு இலட்சத்து 94 ஆயி்த்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கனகேஸ்வரன் கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 இசட் புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17 ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இதவேளை, கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் இப்ராஹிம் அன்பஸ் அகமெட் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதல்நிலை சித்தியை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பெற்றுள்ளார்.

அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்று முதலாம் இடத்தை ப.சுபிலஹ்சி என்றமாணவி பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதல்நிலை சித்தியை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பெற்றுள்ளார்.

அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்று முதலாம் இடத்தை ப.சுபிலஹ்சி என்றமாணவி பெற்றுக்கொண்டார்.

வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் படி பசறை கல்வி வலயத்தில் உள்ள பசறை தமிழ் தேசிய கல்லூரியில் உயிரியியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 16 மாணவர்களுள் 14 பேர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.எம். சி. பிரபாகரன் தெரிவிக்கின்றார். 

இவர்களில் ஹாலிது அன்வர் மொஹமட் ஜமில் என்ற மாணவன் 3 ஏ சித்திகளைப் பெற்று பதுளை மாவட்ட மட்டத்தில் 3ஆம் நிலை யை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

செல்வி.தேவேந்திரன் தனுஷானி 1ஏ, 2பீ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4ஆம் நிலையிலும் செல்வி ஐ. கிரிஷானி 3பீ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 15ஆம் நிலையிலும், செல்வி. நுவானி நிரோஷா 2பீ, 1சீ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 18 ஆம் நிலையிலும் உள்ளனர். 

இம் மாணவர்களில் 4 பேர் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58