நுவரெலியாவில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Digital Desk 4

04 May, 2021 | 08:28 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் 03.05.2021 அன்று பகல் வரை 104 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை, கந்தபளை, நோர்வூட், லிந்துலை மற்றும் ராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22