பயணக் கட்டுப்பாடுகள் குறித்து உரிய தரப்பினர் அவதானம் செலுத்த வேண்டும் - வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய

Published By: Digital Desk 3

03 May, 2021 | 02:47 PM
image

(நா.தனுஜா)

வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்கள் மூலம் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. 

விவேகமாக செயற்படக்கூடிய எந்தவொரு நாடும் இவ்வருடம் தமது நாட்டிற்கான பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்தாது. அவ்வாறிருக்கையில் இதுகுறித்து எமது நாட்டின் அரசியல்வாதிகளும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களும் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று சுகாதாரக்கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவுவதையும் மேலும் நாடு முடக்கப்படுவதையும் தடுப்பதற்கு, விடுமுறைகளின் போது வெளிநாடுகளுக்குச் செல்வது ஊக்குவிக்கப்படக்கூடாது என்று அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அங்கு கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் குறைக்கப்படவோ அல்லது தடுக்கப்படவோ வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதில் சிவப்புப்பட்டியலில் உள்ள இந்தியாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் திரிபடைந்த புதிய வைரஸ் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உயர்வாக இருப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களும் உயர்வாகும். எனவே விவேகமாக செயற்படக்கூடிய எந்தவொரு நாடும் இவ்வருடத்தில் தமது நாட்டிற்குரிய பயண எல்லைகளைத் தளர்த்தாது.

அவ்வாறிருக்கையில் எமது நாட்டின் அரசியல்வாதிகளும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களும் இதுகுறித்த மிகுந்த அவதானம் செலுத்துவதுடன், ஏனைய நாடுகள் எதற்கான அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்று கேள்வி எழுப்பி பரிசீலனை செய்வது அவசியமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47