கொவிட்-19 தொற்றால் பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு

Published By: Vishnu

03 May, 2021 | 02:04 PM
image

ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவிருந்த 30 ஆவது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஈயன் மோகன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருந்தன.

எனினும் கொல்கத்தா அணியில் எழுந்துள்ள கொவிட்-19 தொற்று காரணமாக இப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொல்கத்தா அணியில் இரு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததையடுத்து ஏனைய வீரர்களும், ஆதரவு ஊழியர்களும் அவர்களது ஹோட்டலில் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோரே கெரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக  ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

கொவிட்டின் ஆபத்தான இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடி வருவதால் 5 வீரர்கள் ஏற்கனவே நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகி விட்டனர்.

ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ரோயல்ஸ்), லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ரோல்ஸ்), ரவிச்சந்திரன் அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), ஆடம் ஜாம்பா (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு) மற்றும் கேன் ரிச்சர்ட்சன் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகியே வீரர்களே தொடரிலிருந்து விலகியவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35