கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விஷம் கலந்திருந்தமையே காரணமென பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்தது.

இச் சம்பவம் நேற்றைய தினம் காலை 8.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.