சென்னையின் அதிரடிக்கு பொல்லார்ட்டின் அசத்தலுடன் மும்பை பதிலடி

Published By: Vishnu

02 May, 2021 | 08:04 AM
image

ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொல்லார்ட்டின் அதிரடியுடன் மும்பை அணி நான்கு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் நடைபெற்ற 27 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தியது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா களத்தடுப்பை தேர்வுசெய்ய சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், டூப்பிளஸியும் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுகளம் நுழைய முதல் ஓவரிலேயே ருதுராஜ் நான்கு ஓட்டத்துடன் ஹர்த்திக் பாண்டியாவிடம் பிடிகொடுத்தார்.

அதன் பின்னர் டூப்பிளஸ்ஸுயுடன், சகலதுறை ஆட்டக்காரனான மொயீன் அலி கைகோர்த்தார். 

மொயீன் அலி மும்பை பந்து வீச்சுக்களை பதம் பார்த்தார். குறிப்பாக டிரென்ட் போல்ட், பும்ராவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். 

மறுபுறம் டூப்பிளஸ்ஸுயும் ஏதுவான பந்துகளில் மாயாஜாலம் காட்டினார்.  பும்ராவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டியடித்தார். 

அணியின் ஓட்ட எண்ணிக்கை 112 ஆக உயர்ந்த போது மொயீன் அலி, மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு, 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டூப்பிளஸ்ஸுயும் 28 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சுரேஷ் ரய்னாவும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்காது இரண்டு ஓட்டங்களுடன் வெளியேற சென்னை அணி 12 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக ரவீந்திர ஜடேஜாவும், அம்பத்தி ராயுடுவும் இணைந்தனர். இரண்டு ஓவர்கள் நிதானம் காட்டிய அவர்கள் அதன் பிறகு அதிரடியில் மிரள வைத்தினர்.

குறிப்பாக அம்பத்தி ராயுடு விஸ்வரூபம் எடுத்தார். தவால் குல்கர்னி, பும்ரா, போல்டின் ஓவர்களில் சிக்ஸர்களை தெறிக்கவிட்டு பிரமிக்க வைத்த அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களுடனும், ஜடேஜா 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

219 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும் - குயின்டன் டிகொக்கும் சிறப்பான ஆரம்பத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். அதன்படி அவர்கள் இணைப்பாட்டமாக 7.3 ஓவர்களில் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

எனினும் அதன் பின்னர் ரோகித் சர்மா 35 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் நீண்ட நேரம் நிலைத்து நிக்காது மூன்று ஓட்டங்களுடன் வெளியேற, டிகொக்கும் 38 ஓட்டங்களுடன் மொயீன் அலியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் மும்பை அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக கைகோர்த்த குருணல் பாண்டியா - கிரன் பொல்லார்ட்டின் இணைப்பாட்டம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

குறிப்பாக பொல்லார்ட் சென்னை அணியின் பந்து வீச்சுகளை துவம்சம் செய்தார். ஜடேஜா ஓவரில் 3 சிக்ஸர், நிகிடி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மறுபுறம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாடினார் குருணல் பாண்டியா.

இவர்களின் வலுவான இணைப்பாட்டத்தால் மும்பை அணி 16 ஓவர்களில் 169 ஓட்டங்களை குவிக்க, 16.3 ஆவது ஓவரில் குருணல் பாண்டியா 32 ஓட்டங்களுடன் சாம் கர்ரனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அவரையடுத்து களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடனும், ஜேம்ஸ் நீஷம் டக்கவுட்டுடனும் வெளியேற, இறுதி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆடுகளத்தில் பொல்லார்ட்டும், தவால் குல்கர்னியும் துடுப்பெடுத்தாட, லுங்கி நிகிடி பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரில் பொல்லாரட் 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும், ஒரு இரட்டை ஓட்டத்தையும் பெற்று மும்பையின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. பொல்லார்ட் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களுடனும், குல்கர்னி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த சென்னை அணிக்கு இது 2 ஆவது தோல்வி என்பதுடன் மும்பை அணிக்கு இது 4 ஆவது வெற்றியாகும்.

போட்டியின் ஆட்டநாயகனாக பொல்லாரட் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07