கொழும்பு உள்ளிட்ட 4 மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

02 May, 2021 | 07:02 AM
image

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அந்தவகையில் 4 மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளும் ஒரு பொலிஸ் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலேயே இவ்வாறு சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வலான வடக்கு, வேகட மேற்கு, பள்ளமுல்ல கிழக்கு மற்றும் கிரிபேரிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பொலிஸ் பிரிவின் நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் உவர் மலை கிராமசேவகர் பிரிவு, உப்புவெளி பொலிஸ் பிரிவின் அன்புவழிபுரம் கிராமசேவகர் பிரிவு ஆகியன  உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22