அசேல சம்பத் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

Published By: Digital Desk 3

01 May, 2021 | 06:12 PM
image

(செ.தேன்மொழி)

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு , அந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதன்போது கடந்த மாதம் 20 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு ,சிறைக்கைதிகளை பாதுகாக்கும் அமைபினால் எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய சிறைச்சாலைகள் தலைமையகம் , சிறைச்சாலையின் உதவி அதிகாரி மற்றும் போகம்பர சிறைச்சாலையின் அதிகாரியொருவரையும் மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தது. அதற்கமைய அசேல சம்பத் என்ற நபரை சிறைக்குள் வைத்து தாக்கியதற்கான எந்தவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை. எனினும் 25 ஆம் இலக்க அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் 29 ஆம் அறையில் இருந்ததன் காரணமாக , அவர்களை தங்களுக்கு உரிய அறையில் இருக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக மட்டுமே தெரியவந்துள்ளது.

அசேல சம்பத் என்ற நபர் கடந்த கடந்த மாதம் 26 ஆம் திகதி வரையிலும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அதன்போது அவர் இது தொடர்பில் எவ்வித முறைப்பாடும் அளித்திருக்கவில்லை. 26 ஆம் திகதி பிணையில் சென்ற பின்னர் தனியார் வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்தார். இதன் பின்னரே அவர் சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன இதனைத் தொடர்ந்து அசேல சம்பத்தை வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இதுவரையில் வந்திருக்கவில்லை. சிறைக்கைதிகளை பாதுகாப்பும் அமைபின் தலைவருக்கு நான்கு முறை தொலைபேசி ஊடாக அறிவித்திருந்த போதிலும் அவரும் வருகைத்தரவில்லை.

இது போன்ற பிரசாரங்களினால் சிறைச்சாலைகள் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் இதன் உண்மை நிலவரத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04