கொரோனாவில் இருந்து உலகம் பாதுகாக்கப்பட மே மாதம் முழுவதும் அனைவரும் தமக்குரிய இறை வேண்டலில் ஈடுபடுமாறு யாழ் ஆயர்  அழைப்பு

Published By: Digital Desk 3

01 May, 2021 | 04:53 PM
image

(எம்.நியூட்டன்)

கொரோனாவில் இருந்து உலகம் பாதுகாக்கப்பட மே மாதம் முழுவதும் திருச்செபமாலை சொல்லுங்கள் ஏனைய மதத்தவர்களும்  இக்காலத்தில் தமக்கேயுரிய நாட்களில் தமக்கேயுரிய இறைவேண்டலில் ஈடுபட்டு இக்கொடிய நோய் அகல வேண்டி செபிக்குமாறு யாழ் ஆயர் ஐஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட ஊடக அறிக்ககயில் அவர் இதனை  தெரிவித்தார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன்; (ஏசாயா 41:10) என்ற இறை வார்த்தையை மனதிருத்தி  கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டி திருச்செபமாலை  மாதமான மே மாதம் முழுவதிலும் யாழ் மறைமாவட்டத்தில்  உள்ள ஆலயங்கள் மற்றும் மரியன்னை யாத்திரைத் தலங்கள் அனைத்திலும்  திருச்செபமாலை சொல்லுங்கள்.

இதனைவிட யாழ் மறைமாவட்டத்தில்  உள்ள கத்தோலிக்க மக்கள் அனைவரும் மே மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வீடுகளில் குடும்ப செபமாலை சொல்லி  கொறோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட அன்னையிடம் இரந்து வேண்டுங்கள் 

 இனம் -  மதம் -  நிறம் -  மொழி - கலாசராம் - கண்டம் என்ற எந்த வேறுபாடுமின்றி ஒரு கொடிய உலக யுத்தம்போல் சத்தமின்றி இன்று உலக உயிர்களை அழிக்கின்ற கொரோனா நோய் உலக மக்கள் எல்லாருடைய இயல்பு வாழ்வையும் பாதித்து எல்லாரையும் பயத்திலும் பதட்டத்திலும் இனி என்ன நடக்குமோ என்ற ஏக்க உணர்விலும் வாழ வைத்துள்ளது.

அரச தலைவர்களோ சுகாதார உயர் அதிகாரிகளோ ஆன்மீகத் தவைர்களோ அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் எதுவுமே செய்ய முடியாத ஒருநிலை இதுவாகும். இறைவன் மட்டுமே இந்த இக்கட்டான வேளையில் உதவிக் கரம் நீட்ட முடியும். தம் அளவு கடந்த இறை இரக்கத்தைக் காட்ட முடியும். மனித உயிர்களைப் பாதுகாக்க முடியும். இக்கொடிய நோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

இந்த இக்கட்டான இவ்வேளையில் துணை புரிய  கத்தோலிக்க மக்களுக்கு திருச்செபமாலை ஒன்றே ஒரு பெரிய ஆயுதமாகும். வரலாற்றில் பல தடவைகளில் நம்பிக்கையோடு திருச்செபமாலை சொல்லப்பட்டு நடக்க முடியாது என எண்ணப்பட்ட பல விடயங்கள் புதுமைகளாக நடந்துள்ளன என்பது உலகறிந்த உண்மையாகும்.

எனவேதான் திருத்தந்தை பிரான்சீஸ்  உலகெங்கும் பரவியுள்ள கோவிட் தொற்றை முடிவுக்கு வர  மே மாதம் முழுவதும் அன்னையின் உலகத் திருத்தலங்களில் திருச்செபமாலை சொல்லும்படி அழைப்பு விடுத்துள்ளார். திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது - என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய திருச்செபமாலைச் செப முயற்சியை மே மாதம் முதல் நாள் திருத்தந்தை பிரான்சிஸ்  துவக்கி வைத்து மே மாதம் 31ஆம் திகதி நிறைவு செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொற்று  அனைத்து மக்களுக்குமான ஆபத்தானது என்கின்ற வகையில் மற்றைய மதங்களைச் சேர்ந்த  அன்பர்களும் இக்காலத்தில் தமக்கேயுரிய நாட்களில் தமக்கேயுரிய இறைவேண்டலில் ஈடுபட்டு இக்கொடி நோயில் இருந்து அனைவரும் பாதுகாக்கப்பட மனிதாபிமானத்துடன் செபிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் இத்தொற்று நோய் அதிகரித்து வரும் இக்காலத்தில் அனைவரும் சுகாதார அதிகாரிகளின் விதிமுறைகளை இன்னும் அதிகமாகப் கடைப்பிடித்து கைகளைக் கழுவி சமூக இடைவெளியைப் பேணி அவசர தேவையற்று வீடுகளை விட்டு வெளிவரது இருக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

இந்த இக்கட்டான வேளையிலும் இறை நம்பிக்கையை இழந்து விடாதீhகள். உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் (மத்தேயு 28:20) என்ற நம்பிக்கையின் இறைவார்த்தைகளை இறையாசீருடன் தெரிவிக்கிறோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02