பொலிஸ் தலைமையகம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Digital Desk 2

01 May, 2021 | 10:49 AM
image

செ.தேன்மொழி

கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வார இறுதி நாட்களில் மிகவும் கவனத்துடன் செயற்படுமாறும் , சுகாதார சட்டவிதிகளை முறையாக பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை தினங்களாகும். இந்த காலப்பகுதியில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒன்றுக்கூடல்களை தவிர்த்துக் கொள்வதுடன் , தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பேணல் மற்றும் கைகளை சுத்தம் செய்துக் கொள்ளல் போன்ற சுகாதார சட்டவிதிகளை கட்டயாம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளை பின்பற்றாத நபர்கள் தொடர்பில் பொலிஸார் சீருடை , சிவில் உடைகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்படும் நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 4191 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களுள் 3000 க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31