(லியோ நிரோஷ தர்ஷன்)

மஹிந்த ராஜபக்ஷவின் தனிக் கட்சி இரகசியங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கசிந்துள்ளன. இரு தரப்பு மோதல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் , அடுத்த கட்டமாக மஹிந்த ராஜபக்ஷவின்  வெளிநாட்டு பயணங்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட போகின்றது. 

மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களின் போது அவரது பயண பொதிகள் உரிய முறையில் சோதனையிடப்படுவதில்லை என தெரிவித்து பிரதமரிடம் முறைப்பாட்டொன்றை சிவில் பிரதிநிதிகள் முன் வைத்துள்ளனர். இந்த முறைப்பாடு குறித்த தகவல்கள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எதிராக பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு சோதனைகளின்றி பயண பொதிகளை நாட்டிற்கு வெளியில் கொண்டுச் செல்ல அனுமதிப்பதும் உள்ளே வர அனுமதிப்பதும்  தவறான முன்னுதாரணமாகும்.

 எனவே உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.