பொது மக்கள் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சுசில் பிரேமஜயந்த வேண்டுகோள்

Published By: Digital Desk 2

30 Apr, 2021 | 02:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)



சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த  அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை  வெற்றிக்கொள்ள பொது மக்கள் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.




கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொவிட்-19  வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது.

பலம் வாய்ந்த நாடுகளினால் கூட  கொவிட்-19வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்திற்கு பின்னர்  கொவிட் தொற்று அதிகரித்துள்ளமைக்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து ஒருவருக்கொருவர்  குற்றஞ்சாட்டிக் கொள்வது பயனற்றதாகும். நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

 நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
கொவிட்-19 முதல் மற்றும் இரண்டாம் தாக்கத்தினால்   நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வியலுக்கும் ஏற்பட்ட சவால்கள் இதுவரையில் சீர் செய்யப்படவில்லை.

நெருக்கடியான நிலையிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல வழிமுறைகளில் நிவாரணம் வழங்கியுள்ளது.
தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு முழு  நாட்டையும் முடக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

எதிர் தரப்பினர் குறிப்பிடுவது போன்று நாட்டை முடக்கினால் மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நிலைமையினை சீர்  செய்ய பல வழிமுறைகளில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40