ஜேர்மனின் பிரேன்போர்ட் விமான நிலையத்தில் இருந்து, 261 பயணிகள் மற்றும் 14  விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான UL-554 விமானம் 15 மணித்தியாலயம் தாமதித்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இன்று (20) காலை ஜேர்மன் நேரத்தின்படி 6.20  புறப்பட்ட UL-554 விமானம் இன்று இரவு 7.22 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

விமான சிப்பந்திகள் நேரம் தாமதித்து விமான நிலைத்திற்கு வருகைத் தந்ததனால் குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.