உருமாறிய வைரஸை எதிர்க்க நாம் தயார்: சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் உறுதி..!

Published By: J.G.Stephan

29 Apr, 2021 | 05:10 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொரோனா வைரஸ் உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எம். ஆர்னல்ட் இன்றைய தினம் சுகாதார பணியத்தி நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 27 ஆம் திகதியன்று 1,111 பேரும், 28 ஆம் திகதியன்று 1,466 பேருமாக 2,577 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நம் நாட்டில் முன்னெப்போதும் இது போன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை காணப்படவில்லை.  இதற்கு காரணம் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பது ஆகும். இதனை எதிர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்கள் வீண் பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தத்தமது வீடுகளில் இருந்தாலே போதுமானது.

கொரோனா  தொற்றாளர்களின் சிகிச்சைகளுக்காக 82 அவசர சிகிச்சை பிரிவுகளும் , 12,789 கட்டில்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்களுக்கு ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை. சகல ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம்.  ஆகவே, கொவிட் 19  உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார் நிலையிலேயே இருக்கிறோம்.

பொது மக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். இதனை மீறினால் நாடு மிகவும்  மோசமான நிலைக்குச் செல்லும். ஆகவே, வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27