உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் ஆவணங்கள் இருந்தால் கையளியுங்கள்: பொலிஸ் தலைமையகம்  

Published By: J.G.Stephan

29 Apr, 2021 | 11:21 AM
image

(செ.தேன்மொழி)
உயிர்த்த ஞாயிறுதின குண்டு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  இரகசிய விசாரணைகள் அடங்கிய அறிக்கை கிடைக்கப்பெற்றிருந்தால் அதனை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகள் அடங்கிய அறிக்கையை, கத்தோலிக்க அருந்தையர்களிடம் சிலர் கையளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் கடந்த திங்கட்கிழமை அந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு ஏதேனும் அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தால், அது விசாரணைக்கு மிகவும் பயனுடையதாக அமையும்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் , பயங்கரவாத விசாரணை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , இதுவரையில் 703 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சிலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அருட்தந்தையர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அறிக்கை கிடைக்கப்பெற்றால், அது விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு மேலும் பயனுடையதாக அமையும். தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவுச் செய்ய எதிர்பார்த்துள்ள சந்தர்ப்பத்தில் அந்த அறிக்கை விசாரணை அதிகாரிகளுக்கே கிடைக்கப்பெற வேண்டும். அதனால் கொழும்பு -10 இல் அமைந்துள்ள சமூகம், மத கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அந்த அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கையளிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47