பங்களாதேஷுடனான 2 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Published By: Vishnu

29 Apr, 2021 | 11:21 AM
image

பங்களாதேஷுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள மோமினுல் ஹக் தலைமையிலான பங்களாதேஷ் அணியானது இலங்கையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டி இன்று காலை கண்டி, பல்லேகலயில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியானது சமநிலையில் முடிவடைந்தால் தற்சமயம் டெஸ்ட் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியானது 8 ஆவது இடத்துக்கு செல்லும். 

தற்சமயம் டெஸ்ட் தரவரிசையில் இலங்கை 7 ஆவது இடத்தையும், பங்களாதேஷ் 9 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இலங்கை 83 போனஸ் புள்ளிகளுடன் குறித்த இடத்திலிருந்தாலும், இன்று ஆரம்பமாகும் போட்டி சமநிலையில் முடிவடைந்தால், இலங்கையின் போனஸ் புள்ளிகள் 80 ஆக குறையும்.

எனவே இப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவேது அதன் பட்டியல் தரவரிசையை பாதுகாக்கும்.

இந்த நிலையில் இது குறத்து கருத்து தெரிவித்துள்ளஇலங்கை அணித் தலைவர திமுத் கருணாரத்ன, புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்துவதை விட, அவரும் அவரது அணியும் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற முயற்சிப்பதாக கூறினார்.

"நாங்கள் எப்போதும் வெற்றி பெற ஒரு விளையாட்டை விளையாடுகிறோம். எனவே நாங்கள் அனைவரும் எங்கள் திறனுடன் சிறந்த போட்டியை வெல்ல திட்டமிட்டுள்ளோம். முந்தைய ஆட்டத்திலும் இதைச் செய்ய நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அந்த ஆடுகளத்திலிருந்து நாங்கள் எதிர்பார்த்ததை நாங்கள் பெறவில்லை ”என்று திமுத் கூறினார்.

இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. வனிந்து ஹசரங்க மற்றும் உபாதைக்குள்ளான லஹிரு குமார ஆகியோரை நிறுத்திவிட்டு, ரமேஷ் மெண்டிஸ், புதுமுக வீரராக பிரவீன் ஜயவிக்ரம ஆகிய இருவரை இணைத்துள்ளது.

பங்களாதேஷ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் எபதொத் ஹொசைனுக்குப் பதிலாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஷொரிபுல் இஸ்லாம் தனது டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார்.

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். 

இதன்படி ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் திமுத் கருணாரட்ண மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35