(கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் செம்புவத்தை தோட்டத்தில் 22 வயது மதிக்கதக்க இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தில் வசிக்கும் சிவலிங்கம் சசிகுமார் வயது 22 என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இந்த இளைஞனின் மரண விசாரணை தொடர்பில் அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை, இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.