மட்டுப்படுத்தப்பட்ட கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகள்

Published By: Vishnu

29 Apr, 2021 | 08:01 AM
image

கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருபவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியன நாங்கள் முன்னுரிமையளிக்கும் பிரதான அம்சங்களாகும்.

தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக, எமது சில கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும்.

எனவே, எதிர்வரும் வாரங்களில், கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள், அவசரமான / உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மரணங்கள் சார்ந்த விடயங்கள், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சான்றிதழ்களுக்கு சான்றளித்தல் ஆகியன தவிர்ந்த கொன்சியூலர் சேவைகள் கட்டாயமான முன் நியமனத்தின் அடிப்படையில் மாத்திரம் வழங்கப்படும்.

முன் நியமனங்களை மேற்கொள்வதற்காக 011 2335942, 011 2338836 மற்றும் 011 2338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01