(எஸ்.சதீஸ்)

நீண்ட நாட்களாக பதிவுத் திருமணம் செய்யாத இளம் ஐோடிகளுக்கு பதிவுத் திருமணம் நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனா்.

பொகவந்தலாவை பெற்றோசோ தோட்டப்பகுதியில் 18 வயதுடைய இரு இளம் ஜோடிகள் பதிவு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தநிலையில் குறித்த ஜோடிகளுக்கு பொகவந்தலாவை  பொலிஸார் பதிவுத் திருமணம் செய்யநடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொதுமக்களால் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியமைக்கு அமைய பொகவந்தலாவை பெற்றோசோ தோட்டப்பகுதிக்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதில் 18 வயதுடைய இரு இளம் ஜோடிகள் பதிவுத் திருமணம் செய்யாமல் வாழ்ந்து  வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஜோடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பிறப்புசான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் என்பவை பரிசீலிக்கப்பட்டு குறித்த ஜோடிகளை உடனடியாக பதிவுத் திருமணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.

இதையடுத்து நோர்வுட் பிரதேசத்திலுள்ள பதிவாளா் காரியாலயத்திற்கு குறித்த ஜோடிகள்  அனுப்பிவைக்கபட்ட பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் யுவதிகள் குறித்து பெற்றோர்கள் ஆவதானத்துடன் செயல்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.