களுத்துறை சிறைக்குள் வீசப்பட்ட பொதிகளில் போதைப்பொருள்

Published By: Digital Desk 4

28 Apr, 2021 | 05:02 PM
image

(செ.தேன்மொழி)

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் வீசப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருட்கள், தொலைபேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) தெரிவித்தார்.

களுத்துறை சிறைக்கு அருகில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மீட்பு | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

களுத்துறை சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய இரு பொதிகள் வீசப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இரவு வேளையிலேயே இவ்வாறு பொதிகள் எறியப்பட்டுள்ளன.

இதன்போது கடந்த செவ்வாய்க்கிழமை எறியப்பட்ட பொதியிலிருந்து , ஹெரோயின் போதைப் பொருட்கள் என்று கருதப்படும் போதைப்பொருள் அடங்கிய 158 பக்கற்றுகளும், 20 கிராம் கஞ்சா போதைப் பொருள், இரு தொலைபேசிகள், 30 போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் மறுநாள் புதன்கிழமை எறியப்பட்டிருந்த பொதியிலிருந்து , 6 தொலைபேசிகள் , 10 புகையிலைகள், 2 மின்னேற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ,கைப்பற்றப்பட்ட தடைச் செய்யப்பட்ட பொருட்களை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09