நுவான் சொய்சாவுக்கு 6 வருட போட்டித் தடை

Published By: J.G.Stephan

28 Apr, 2021 | 05:23 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான நுவன் சொய்சாவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டின் சகல நடவடிக்கைகளிலும் பங்கேற்க ஆறு ஆண்டு கால தடையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) விதித்துள்ளது.


ஐ.சி.சி. யின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நுவன் சொய்சாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி.யின். பொதுமுகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

2018ஒக்டோபர் 31 இல் சொய்சாவுக்கான தடை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது. 

முன்னர் அறிவுறுத்தியபடி எழுத்துமூல மற்றும் வாய்மொழி மூல அறிக்கையின்படி, முழு விசாரணைகள் மற்றும் விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து, ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு நுவன் சொய்சாவை குற்றவாளி எனக் கண்டறிந்தது.

ஐ.சி.சி.யின் 2.1.1 ஆம் பிரிவு, 2.1.4 ஆம் பிரிவு, 2.4.4 ஆம் பிரிவு ஆகிய சட்டங்களின் கீழ் ஊழல் நிறைந்த நடத்தைகளில் ஈடுபடுவதற்கு பெறப்பட்ட எந்தவொரு அணுகுமுறைகள் அல்லது அழைப்புகள் பற்றிய முழு விபரங்களையும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு வெளிப்படுத்தத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்டார்.

இதுகுறித்து ஐ.சி.சியின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், 

 “நுவன் இலங்கைக்காக125 போட்டிகளில் விளையாடியுள்ளார், ஒரு தசாப்த கால சர்வதேச வாழ்க்கையில் பலமுறை ஊழல் எதிர்ப்பு அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார். 

அவர் ஒரு தேசிய பயிற்றுநர் என்ற ரீதியில், அவர் ஒரு முன்மாதிரியாக செயற்பட்டிருக்க வேண்டும். 

ஆயினும், அவர் ஊழல்வாதியொருவருடன்தொடர்பு கொண்டு ஏனையோரையும் ஊழலில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளார். 

ஒரு விளையாட்டை சரிசெய்ய முயற்சிப்பது விளையாட்டுக் கொள்கைகளின் அடிப்படையை காட்டிக்கொடுக்கிறது. இது எங்கள் விளையாட்டில் பொறுத்துக்கொள்ளமுடியாது ”என அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35