2015 ஆம் ஆண்டின் LMD 100 சிறந்த நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான டோக்கியோ சீமெந்து மீண்டும் ஒரு தடவை தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் 25ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 

உற்பத்தியாளர் பிரிவில், டோக்கியோ சீமெந்து, முதலாமிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. 

அண்மையில் நடைபெற்ற CIMA LMD 100 நிகழ்வின் போது இந்த கௌரவிப்பை டோக்கியோ சீமெந்து பெற்றிருந்தது.