குடும்ப பிரச்சினையை தீர்க்கச் சென்ற மாமனார் பலி : தந்தை, மகனுக்கு விளக்கமறியல்  

Published By: Digital Desk 4

27 Apr, 2021 | 08:58 PM
image

மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயதுடைய மகனையும் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில்  வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.

ஏறாவூர் ஆறுமுகதான்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான தம்பிப்பிள்ளை மனேகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது சகோதரியின் மகளின் குடும்பமான கணவன் மனைவிக்குள் ஏற்பட்டுள்ள குடும்பபிரச்rசினையை தீர்ப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (25) திகதி பகல் 2 மணியளவில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதனை 15 வயதுடைய அவர்களின் மகன் கையடக்க தொலைபேசியில் உயிரிழந்தவரை வீடியோ எடுத்ததையடுத்து உயிரிழந்தவர் அந்த சிறுவனின் கையடக்கத் தொலைபேசியை பறித்து அவனின் கன்னத்தில் அடித்துள்ளார்.

இதனையடுத்து தனது மகனை அடித்ததையடுத்து கோபமடைந்து உயிரிழந்தவரை தந்தையும் மகனும் சேர்ந்து அடித்து தாக்கி தள்ளியுள்ளனர்.

இதனையடுத்து தாக்கியவர்களை உறவினர்கள் விலக்கிய பின்னர் அவரைபார்த்தபோது மூச்சின்றி கிடந்ததையடுத்து அவரை உடன் அருகிலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றநிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயது மகனையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜயர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில்  வைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47