பொலிஸ் திணைக்களத்தில் தனக்கு மீளவும்  சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே விரைவில் நான் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவேன் என எதிர்ப்பார்க்கின்றேன். எனினும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்படல் வேண்டும்  என முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி வீரகேசரியிடம் தெரிவித்தார். 

மீளவும் பிரசாந்த ஜயகொடியை சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதையடுத்து அது தொடர்பில்  வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கடந்த அரசின் காலத்தில் பல்வேறு அநீதிகளுக்கு உட்பட்டவன் என்ற வகையில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் நியாயம் வழங்கப்படல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்  

முன்னாள் பாது­காப்பு செய­லாளர்  மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்தி­ரே­லியா சென்றேன்.

அப்­போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­ததால் தனது மகள், மனை­வியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் . பொலிஸ் பேச்சளராக இருந்த போது, அசாதாரணமான அறிக்கை வெ ளியிட வற்புறுத்தப்ப்ட்டேன். அதற்கு நான் மறுத்ததால் அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டேன். இரத்தினபுரியில் கடமையாற்றும் போதும் சிக்கல்கள் வந்தன. 

பல்­வேறு தொலை­பேசி அழைப்­புக்கள் ஊடாக வந்த அழைப்­புக்கள் ஊடாக உன்­னையும் உனது குடும்­பத்­தி­ன­ரையும் கொலை செய்வோம், சவப் பெட்­டியை தயா­ராக வைத்­துக்கொள் என்ற பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள் எனக்கு வந்தன.  

அது தொடர்பில் நான் எனது மேல­தி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்த போதும் எவ்­வித பலனும் இல்லை. அந்த தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்தி விசா­ரித்து பார்த்­ததில் அந்த இலக்­கங்கள் பாது­காப்பு அமைச்சின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டவை என்­பதை நான் அறிந்­து­கொண்டேன்.

இந் நிலையில்   ஐக்­கிய நாடுகள் சபை­யினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட மனித நேய விட­யங்­க­ளுக்குள் உள்ள வாழும் உரிமை கூட இல்­லாத நிலையில் நான் அவு­ஸ­தி­ரே­லி­யா­வுக்கு தப்பிச் சென்றேன்.

சட்ட ரீதி­யா­கவே நான் அவுஸ்­தி­ரே­லியா சென்று அகதி அந்­தஸ்து பெற்றேன். அங்கும் என்னை தேடி­வந்­த­தாக தகவல் வரவே பல இடங்­களில் சென்று வாழ்ந்தேன். எனினும் அவுஸ்­தி­ரே­லிய அரசு எனக்கு பூரண ஆத­ரவு தந்­தது.

 இந் நிலையிலேயே ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை கொண்டு நாடு திரும்பினேன். எனவே எனக்கு நியாயம் வேண்டும்  என்றார்.