முச்சக்கர வண்டியின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகங்களின் மூலம் தமிழ் மொழி வாழ்கின்ற அதேவேளையில் பஸ் வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ் மொழி வீழ்கின்றது என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு புறக்கோட்டை புடைவை வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் இன்று கலந்து கொண்டு உரையாடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பஸ்களில் பொரிக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக காணப்படுவதாகவும், அதை தமது கையடக்கதொலைபேசியில் படம் பிடித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதற்கு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தேசிய சகவாழ்வு,கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனிடம் வேண்டுகோளும் விடுத்தார்.