ரிஷாத், ரியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

27 Apr, 2021 | 02:49 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரும் , பயங்கரவாத விசாரணைப்பிரிவினரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் , பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6:1 சரத்துக்கமைய 72 மணித்தியாலய தடுப்புகாவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலையுடன் அந்த அனுமதிக்கான காலம் முடிவடைந்திருந்தது.  

சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக , விசாரணை அதிகாரிகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 9:1 சரத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டனர்.

அதற்கமைய நேற்றைய தினம் முதல் அவர்கள் இருவரும் எதிர்வரும் 90 நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்தஞாயிறுதின குண்டு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய , கிடைக்கப் பெற்றுள்ள தனிநபர்களின் சாட்சிகள் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான சாட்சிகளின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களிடம் மேலும் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் , அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47