இந்தியாவில் கொரோனா சுனாமி “இரண்டாவது அலைக்கு வித்திட்டுள்ள விட்டேத்தி மனப்பான்மை”

Published By: Digital Desk 2

26 Apr, 2021 | 02:42 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

  

“இந்தியர்களுக்கு அரசியல் உணர்வுகள் மேலோங்கிய நிலையில், தொற்று நோயின் பாரதூரமான விளைவுகள் பற்றிய பிரக்ஞை மறைந்து போனது.அதன் விளைவால் தற்போது கொரோனா தாண்டவமாடுகிறது”
ஆங்கிலத்தில்  Complacency   என்றொரு வார்த்தை உண்டு. இதனை விளக்க தமிழில் தனிச்சொல் கிடையாது.
ஒரு அபாயம் வருகிறதென வைத்துக் கொள்வோம். அது பற்றிய போதிய புரிந்துணர்வு இல்லாமல், நமக்கொன்றும் நடந்து விட மாட்டாதென அசிரத்தைப் போக்குடன் இருத்தல் என்று வரையறுக்கலாம்.








இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நிலைக்கு, இத்தகைய அசிரத்தைப் போக்கு, அஜாக்கிரதை  தான் காரணமா? இந்தியாவில் கொரோனா தொற்று பற்றிய புள்ளி விபரங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மருத்துவமனைத் தாழ்வாரங்கள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. உயிருக்கும், சாவுக்கும் இடையில் போராடும் நோயாளிகளுக்காக உறவினர்கள் கட்டில்களையும்,  உயிர்வாயுவையும் தேடி அலையும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.


நடுவீதியில் நிகழும் மரணங்கள். மரணித்தவர்களை முறையாக எரிக்க முடியாத நிலையென தீவிர அவலங்கள் அரங்கேறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.


நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட தேசம். ஒரு கட்டத்தில் ஆகக்கூடுதலான மரணங்கள், தொற்றுக்கள் என பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உச்சத்தில் இருந்தது.


கடந்த ஆண்டின் கடைசிப் பகுதியில் மரணங்களும், தொற்றுக்களும் சடுதியாக வீழ்ச்சி கண்டன. நாடு தழுவிய ரீதியில் அமுலாக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் இதற்குக் காரணம் எனலாம். இந்தப் புள்ளியில் தான் அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அசிரத்தைப் போக்கு ஏற்பட்டது.



இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-25#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04