அவதிப்படும் இந்தியாவிற்கு உதவ சீனா உள்ளிட்ட உலக நாடுகள் முன்வருகை

Published By: Digital Desk 3

26 Apr, 2021 | 12:04 PM
image

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் 2 ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு  இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. 

இதனால், இந்தியாவில் உள்ள முக்கிய வைத்தியசாலைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நோயாளிகளுக்கு ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

அமெரிக்கா

இந்தியாவில் நிலவும் ஒட்சிசன்  தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இருந்து, சுமார் 5 தொன் எடை கொண்ட 300 ஒட்சிசன்  செறிவூட்டிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பட்டுள்ளது.

இங்கிலாந்து

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600 க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்

இந்தியாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள ஒட்சிசன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்திய விமானப்படை சிங்கப்பூரில் இருந்து 4 கொள்கலன்களில் ஒட்சிசன் கலன்களை எடுத்துவர உள்ளது.

பிரான்ஸ்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு உதவ தயார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.

சீனா

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த இரண்டாவது அலையின் தீவிரம் நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உதவ நாங்கள் தயார் என சீனா தெரிவித்துள்ளது. 

ஜேர்மனி

கொரோனாவின் கோரப்பிடியில் மீண்டும் சிக்கித் தவித்து வரும் இந்திய மக்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் ஜேர்மனி நாட்டின் அதிபர் அங்கெலா மெர்க்கெல்.

 கிரேட்டா தன்பெர்க்

இந்தியாவின் அண்மைய நிலையை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே. உலக சமுதாயம் ஒன்றுபட்டு இந்தியாவிற்கு தேவைப்படும் உதவியை கொடுக்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41