முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் வெடிப்பு : ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம்

Published By: Digital Desk 4

25 Apr, 2021 | 07:06 PM
image

(செ.தேன்மொழி)

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இதன்போது இரு ளைஞர்கள் காயமடைந்திருந்ததுடன் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தில் 19, 20 வயதுடைய இளைஞர்கள் இருவரே காயமடைந்திருந்தனர். இதன்போது 19 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் , தொடர்ச்சியான மழைக்காரணமாக பூமிக்குள் புதைந்து கிடந்த பொருட்கள் சில வெளியில் தெண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , கடந்த யுத்தகாலத்தின் போது புதைத்துவைக்கப்பட்டிருந்த ஏதேனும் பொருளில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் விசேட நிபுணர்களின் பரிசோதனையின் பின்னரே அதனை உறுதியாக தெரிவிக்க முடியும். இந்நிலையில் விசேட நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33