இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் ; ஜெருசலேம் - காசா எல்லையில் வெடித்த புதிய ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

25 Apr, 2021 | 10:05 AM
image

காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி 36 ரொக்கெட்ட தாக்குதல்கள் சனிக்கிழமையன்று ஏவப்பட்டுள்ள நிலையில், ஜெருசலேம் மற்றும் காசா எல்லையில் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் மூடப்பட்ட கர்னி கிராசிங் அருகே 700 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெருசலேமில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்த ஆயிரக்கணக்கான கசார்கள் வீதிகளில் இறங்கியதுடன், காசா பகுதி முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

காசாவின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களில் தற்சமயம் பகிரப்பட்டுள்ளன.

மேற்குக் கரை முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, அங்கு மக்கள் இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளுக்கு அணிவகுத்துச் சென்றனர்.

இதற்கிடையில், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்கும் இடையில் ஒரு புதிய தொடர் வன்முறைகள் ஜெருசலேமின் பழைய நகரத்திற்கு வெளியே உள்ள டமாஸ்கஸ் வாயிலில் தொடங்கப்பட்டுள்ளன. 

வாயிலில் ஏற்பட்ட மோதல்களின் போது ஆறு பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். கிழக்கு ஜெருசலேமில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பதட்டங்களின் எழுச்சி புனித ரமலான் மாதத்தின் மத்தியில் நடைபெறுகிறது மற்றும் உள்ளூர் ஊடகங்களில் வெளியான யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களால் தூண்டப்பட்டுள்ளது

அதேநேரம் பாலஸ்தீனியர்கள் 15 ஆண்டுகளில் தங்கள் முதல் பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். மேற்குக் கரை மற்றும் காசா பகுதி இரண்டிலும் பாராளுமன்றத் தேர்தல் மே 22 ஆம் திகதியும், ஜனாதிபதித் தேர்தல் ஜூலை 31 ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52