திருகோணமலை, முதலியார் குளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கஹதல ஆராச்சிலாகே சிறிபால மணபந்து (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

50 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட உறவினரொருவர் தன் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் உறவினரான இந்துரானி செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை(19) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.