விச ஊசி விவகாரம் : உடனடி விசாரணைக்கு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன் : சுவாமிநாதன்

Published By: MD.Lucias

19 Aug, 2016 | 03:57 PM
image

 

 முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு  இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த அமைச்சர்,  சிறைச்சாலைகளின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்த அமைச்சர் கைதிகளையும் பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தினை பார்வையிட்டதுடன் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ரி.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் சிறைச்சாலையில் உள்ள ஏனைய சிறைக்கைதிகளையும் அமைச்சர் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களின் விபரங்கள் கிடைக்கும்.

தற்போது 89 பேரின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவர்களில் யாருக்கு புனர்வாழ்வு அளிக்கமுடியும் என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன். பல வருடகாலமாக  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு முடிவு காணப்படவேண்டும்.

முன்னாள் போராளிகள் சிலருக்கு புனர்வாழ்வளிக்க கடந்தமுறை சில சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் அரசியல்வாதிகளுடன் இது தொடர்பாக கதைத்துள்ளேன். இனி இவ்வாறான எதிர்ப்புகள்  வராது.

விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. யாரு ஏற்றினார்கள், யாரு கொடுத்தார்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. 

எனினும்  இவ்விடயம் தொடர்பில்  விசாரணை செய்த போது சில போராளிகள் உண்மையாக சாதாரண நோய் காரணமாகவே இறந்துள்ளனர்.

ஆனால் இருவர் ஏதோ ஒரு சுகயீனம் காரணமாக இறந்தார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17