விசேட ஆணைக்குழு அமைத்து எம்மை பயமுறுத்த முடியாது முடிந்தால் செய்து காட்டுங்கள் - ரவூப் ஹக்கீம்

Published By: Digital Desk 3

24 Apr, 2021 | 10:32 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து எம்மை பயமுறுத்த முடியாது. அதற்கு நாங்கள் பயப்படப்போவதுமில்லை. முடிந்தால் செய்து காட்டுங்கள். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19 ஆம் திகதிவரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் அமைத்திருக்கும் விசேட ஜனாபதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் 11 பேர் கூட்டாக தெரிவித்திருக்கின்றனர். இது சாதாரண விடயமல்ல. அதேபோன்று அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 

அரசாங்கத்தில் இருக்கும் சிலருக்கு கடந்த காலத்தில் நீதிமன்ற தீர்ப்பினால் தண்டனை அனுபவித்ததை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடாது. அதற்கு மாற்று வழிகள் இருக்கின்றன. நீதிமன்றங்களுக்கு சென்று தங்களது நியாயத்தை முன்வைக்கலாம்.

மேலும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களினால் அரசியல் பழிவாங்கல்கள் இரண்டு தரப்பினராலும் ஏற்பட்டிருப்பதாக வரலாற்றில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. இது புதிய விடயமல்ல. ஆனால் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகும் அரச அதிகாரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பல அரச அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

அத்துடன் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதன் தேவை என்ன? இந்த நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது. சட்டமா அதிபரே இதுதொடர்பாக தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார். வழக்கு விசாரணை செய்யும்  நீதிபதிகளையும் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றது அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் நாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும்போது அது எதற்கு என அனைவருக்கும் தெரியும். பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக நாங்கள் கதைக்கும்போது மஹிந்தானந்த அளுத்கமகே எம்மை பார்த்து, ஏன் பயமா என கேட்டு பயமுறுத்த பார்க்கினறார்.

எம்மை பயமுறுத்தி அடக்க முடியாது. முடிந்தால் செய்துபாருங்கள். அன்று ஜே.ஆர். செய்த நடவடிக்கையால் இறுதியில் ரணில் விக்ரமசிங்க மக்களிடம் மன்னிப்பு கோரினார். அவ்வாறான பயங்கரமான விடயங்களை மேற்கொள்ளத்தேவையில்லை. அதற்காக நாங்கள் பயப்படவும் மாட்டோம். முடிந்தால் செய்துபாருங்கள்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11